தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1,863 பதவிகளுக்கு டிச.,27ல் தேர்வு

1,863 பதவிகளுக்கு டிச.,27ல் தேர்வு

1,863 பதவிகளுக்கு டிச.,27ல் தேர்வு


UPDATED : அக் 13, 2015 12:00 AM

ADDED : அக் 13, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2015 12:00 AM ADDED : அக் 13, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: அரசு துறைகளில்
, குரூப்-2 ஏ பிரிவில், 1,863 காலியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில், பட்டப்படிப்பு முடித்த அனைவரும் பங்கேற்கலாம். 

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: 

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 ஏ பிரிவில், நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளில், 10க்கும் மேற்பட்ட துறைகளில், 1,863 காலியிடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு நடக்கும். தேர்வு எழுத விரும்புவோர், ஆன்லைன் மூலம் மட்டுமே, நவ., 11க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, நவ., 13க்குள் செலுத்தலாம். தமிழகம் முழுவதும், 116 மையங்களில் தேர்வு நடக்கும். பட்டப்படிப்பு முடித்த அனைவரும் தேர்வில் பங்கேற்கலாம். 

தேர்வுக்கான தகுதி விவரங்களை, http://www.tnpscexams.net/ மற்றும் http://www.tnpscexams.in/ என்ற இணையதள இணைப்புகளில் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us