தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அக்.17,18ல்தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்

அக்.17,18ல்தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்

அக்.17,18ல்தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்


UPDATED : அக் 15, 2015 12:00 AM

ADDED : அக் 15, 2015 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2015 12:00 AM ADDED : அக் 15, 2015 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 கணினி பயன்பாட்டாளர்கள் இடையே, தமிழ் எழுத்துருவின் முக்கியத்தும் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம்-2015, இம்மாதம் 17,18 ஆகிய தேதிகளில் நடக்கிறது, என, கணித் தமிழ் சங்க தலைவர் சொ.ஆனந்தன் கூறினார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் நடக்கும், கருத்தரங்கம் குறித்து, அவர் கூறியதாவது: 

தமிழ் எழுத்துருவின் பண்புகள்; ஆப்பிள், ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழ் எழுத்துருவின் அனுபவங்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சித் திரையில் எழுத்துரு பிரச்னை; கலை விளம்பர ஊடகங்களில் எழுத்துரு ஆகிய தலைப்புகளில், விவாதங்கள் நடக்கின்றன.மும்பை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஸ்ரீகுமார், மும்பை ஐ.ஐ.டி., டிசைன் பள்ளி பேராசிரியர் கிரிஸ் டல்வி, கவுகாத்தி ஐ.ஐ.டி., பேராசிரியர் உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு கணினித் துறை, அச்சுத் துறை முன்னோடிகள், கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.

கணினியை பயன்படுத்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பங்கேற்கலாம். கருத்தரங்கு நுழைவுக் கட்டணம், 1,500 ரூபாய். கணித் தமிழ் சங்கம், உத்தமம் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 750 ரூபாய். மாணவர்களுக்கு 500 ரூபாய். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே, கருத்தரங்கில் பங்கேற்க முடியும். இம்மாதம் 15ம் தேதிக்குள், முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு; கணித் தமிழ் சங்கம், 2வது மாடி, 421 அண்ணா சாலை, சென்னை-18 என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி: 2435 5564, 94440 75051; இ.மெயில் tamiltypography@gmail.com. இணையதளம்: kanithamizh.in இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us