காளை அடக்கும் பாடத்திட்டம்; ஸ்பெயின் பள்ளிகளில் துவக்கம்
காளை அடக்கும் பாடத்திட்டம்; ஸ்பெயின் பள்ளிகளில் துவக்கம்
UPDATED : அக் 23, 2015 12:00 AM
ADDED : அக் 23, 2015 10:31 AM
மாட்ரிட்
: ஐரோப்பிய
கண்டத்தில், ஐபீரிய தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள,
ஸ்பெயின் நாட்டின் பள்ளிகளில், காளையை அடக்குவதற்கான, இரண்டு ஆண்டு
படிப்பை துவக்க, அந்நாட்டு அரசு முடிவு
செய்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில், சீறிப் பாய்ந்து வரும் காளைகளுக்கு எதிரில் நின்று, அதனை அடக்கும் விளையாட்டு உலகப் புகழ் பெற்றது. ஆபத்தான இந்த விளையாட்டை, அந்நாட்டு மக்கள் தைரியமாக விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக, காளைகளை அடக்குவதற்கான இரண்டு ஆண்டு பயிற்சியை பள்ளிகளில் துவக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட உள்ள இந்த படிப்பில், 16 வயது நிரம்பிய, பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் சேரலாம். அவர்களுக்கு, &'தியரி&' படிப்பு பள்ளியிலும், செய்முறை படிப்பு பிரத்யேக நிறுவனம் மூலமும் வழங்கப்படும்.
இரண்டு ஆண்டு
படிப்பில் தேறிய மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்படும்.அரசின் இந்த
முடிவுக்கு அந்நாட்டு எதிர்க் கட்சிகளும், விலங்குகள் நல
ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்களின் போக்கு மாறிவிடும்; இந்த பாடத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், மக்களின் கருத்துகளை அறிய வேண்டும் என, கூறியுள்ளனர்.
