தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.டி.சி., போட்டித் தேர்வில் 3,240 பேர் ஆப்சென்ட்!

யு.டி.சி., போட்டித் தேர்வில் 3,240 பேர் ஆப்சென்ட்!

யு.டி.சி., போட்டித் தேர்வில் 3,240 பேர் ஆப்சென்ட்!


UPDATED : அக் 26, 2015 12:00 AM

ADDED : அக் 26, 2015 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2015 12:00 AM ADDED : அக் 26, 2015 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள யு.டிசி., பணியிடங்களை நிரப்ப நேற்று நடந்த போட்டித் தேர்வில், 3,240 பேர் ஆப்சென்ட் ஆகினர். 

தேர்வு முடிவுகளை, நாளை மறுநாள் (28 ம் தேதி) வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 503 யு.டி.சி., பணியிடங்களை நிரப்ப, நேற்று போட்டி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 85 மையங்களில் காலை 10.00 மணிக்குத் தேர்வு துவங்கி, 12.00 மணி வரை நடந்தது. 

3,240 பேர் ஆப்சென்ட்

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் தேர்வு எழுதினர். மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்து 617 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 30,380 மட்டுமே தேர்வு எழுதினர். 3,240 பேர் ஆப்சென்டாகி இருந்தனர்.

கெடுபிடி

விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, புதுச்சேரி பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அரசு செயலர் சுந்தரவடிவேலு ஆய்வு செய்தார். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு அறைக்குள் மொபைல்போன் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.சில தேர்வர்கள், தேர்வு துவங்கிய சில நிமிடங்கள் கழித்து அவசர அவசரமாக ஓடிவந்து, பதற்றத்துடன் எழுதினர்.

மாற்றுத்திறனாளிகள்

யு.டி.சி., தேர்விற்கு அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளும் விண்ணப்பித்திருந்ததால், இந்தாண்டு விவேகானந்தா மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 14 பார்வையற்ற மாணவர்கள், உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதினர். மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு, 40 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ரிசல்ட் எப்போது?

அரசு செயலர் சுந்தரவடிவேலு கூறும் போது, யு.டி.சி., போட்டித் தேர்விற்கான விடைகள், 26ம் தேதி காலை 10:00 மணிக்கு அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். விடைகள் குறித்து ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம். இந்த ஆட்சேபனை 27 ம் தேதி காலை 10:00 மணி வரை பெறப்படும். பின், விடைத்தாள் ஆப்டிகல் ஸ்கேனர் மூலம் திருத்தப்படும். நாளை மறுநாள் (28 ம் தேதி) யு.டி.சி.,ரிசல்ட் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

பட்டதாரிகளுக்கு சவால்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மேம்பாட்டு கழகம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டது. ஐ.ஏ.எஸ்.,தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்களும் யு.டி.சி., தேர்வு எழுதினர். இந்திய ஆட்சி பணிகள் நிறுவனம் மூலமும், ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்திலும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகள், அரசு பணிக்கு காத்திருந்த இளைஞர்களுக்கு உதவியாக இருந்தது.

அதே போல், புதுச்சேரி முழுவதும் பல்வேறு தனியார் கோச்சிங் சென்டர்கள் மூலம் யு.டி.சி., தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. எனவே, நேற்றைய தேர்வு, புதுச்சேரி பட்டதாரிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

நேரம் போதவில்லை

யு.டி.சி., தேர்வு வினாத்தாள் 47 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. இவற்றில் 100 கொள்குறி வினாக்கள் இடம் பெற்றிருந்தது. ஒரு வினாவில் 4 விடைகள் வழங்கப்பட்டு, சரியானதை கண்டறிதல் குறித்த வினாக்கள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன. வினாக்கள் ஒவ்வொன்றும் அரை பக்கம் முதல் ஒரு பக்கம் அளவில் இருந்ததால், வினாக்களை படித்து பார்த்து பதில் அளிக்க நேரம் போதவில்லை எனவும், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us