UPDATED : அக் 26, 2015 12:00 AM
ADDED : அக் 26, 2015 11:18 AM
மதுரை
: மதுரை
காமராஜ் பல்கலை உறுப்புக் கல்லுாரிகளின் உதவி ஆசிரியர்களுக்கு தீபாவளி முன்பணம்
வழங்கப்படாததால் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இப்பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு முன்பணம் வழங்கப்பட்ட நிலையில், பல்கலைக்கு உட்பட்ட திருமங்கலம், ஆண்டிபட்டி, வேடசந்துார், சாத்துார், அருப்புக்கோட்டை, கோட்டூர் உறுப்புக் கல்லுாரிகளின் உதவி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து திருமங்கலம் கல்லுாரி ஆசிரியர்கள், அலுவலர்கள் பல்கலை பதிவாளர் ராஜசேகரிடம் மனு அளித்தனர்.
அவர்கள்
கூறியதாவது:
ஆறு கல்லுாரிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த ஆண்டு இப்பிரச்னை இல்லை. தற்போது இதுகுறித்து பதிவாளரிடம் மனு அளித்தபோது எந்த பைல்களும் சம்மந்தப்பட்ட கல்லுாரி முதல்வர்களிடம் இருந்து தமக்கு வரவில்லை, என்கிறார்.
முதல்வர்களிடம் கேட்டால் பைல்கள் அனுப்பி
விட்டோம், என்கின்றனர். இப்பிரச்னை குறித்து
பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
