தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உற்சாகம் தருகிறது இந்தியா; பேஸ்புக் நிறுவனர் மார்க் பெருமிதம்

உற்சாகம் தருகிறது இந்தியா; பேஸ்புக் நிறுவனர் மார்க் பெருமிதம்

உற்சாகம் தருகிறது இந்தியா; பேஸ்புக் நிறுவனர் மார்க் பெருமிதம்


UPDATED : அக் 28, 2015 12:00 AM

ADDED : அக் 28, 2015 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2015 12:00 AM ADDED : அக் 28, 2015 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: டில்லி ஐஐடி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், இந்தியாவில் இருப்பது உற்சாகமாக உள்ளது. புது ஆற்றலை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார்.


இந்தியா வந்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், டில்லி ஐஐடி,க்கு சென்றார். அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம்:


கேள்வி:
 இந்தியா வர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வந்தது?

பதில்:
 பேஸ்புக்கின் முக்கிய சந்தை இந்தியா. இங்கு 13 மில்லியன் பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். பலர் இன்டர்நெட் பயன்படுத்துவதில்லை. அதனால் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள இங்கு வாய்ப்புக்கள் அதிகம். இந்திய மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது அவசியம். 


உலகிலேயே பேஸ்புக் அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தொடர்பு இல்லாமல் உங்களால் உலக நாடுகளிடையே தொடர்பு ஏற்படுத்த முடியாது. இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு பில்லியனை தொட வேண்டும் என விரும்புகிறோம். அதனால் இந்தியா வந்துள்ளது உற்சாகமாக உள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துபவர்களால் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். வறுமையை ஒழிக்க வழி செய்ய முடியும்.


கேள்வி
: கேண்டி கிரஷ் (candy crush) கோரிக்கைகளை எவ்வாறு தடுப்பது?

பதில்:
 அதற்கான தீர்வை காணும் பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.


கேள்வி :
 பேஸ்புக்கிடம் இருந்து எந்த மாதிரியான புதுமைகளை எதிர்பார்க்கலாம்?

பதில்:
 அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் இன்னும் மேன்மையான கம்ப்யூட்டர் சிஸ்டம்களை உருவாக்க நினைக்கிறோம். அதன் மூலம் உலகின் பல மொழிகளை இன்னும் எளிதாக மொழி பெயர்க்கவும், எளிதில் புரிந்து கொள்ளவும் முடியும். இனி வரும் காலங்களில் ஹெட்செட் மூலமும் பேஸ்புக்கை பயன்படுத்தும் முறையை கொண்டு வர உள்ளோம். இதனால் உலகின் எந்த பகுதியில் இருந்தும் உங்களால் பேஸ்புக்கை பயன்படுத்த முடியும்.


கேள்வி:
 மார்க் சூப்பர் பவாராக உதவியது எது?

பதில்:
 மிகச் சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்று தான் மக்களை சூப்பர் பவராக்குகிறது.


கேள்வி:
 கல்வித்துறையில் பேஸ்புக்கின் பங்கு?

பதில்:
 ஆன்லைன் மூலம் கல்விக்கான விபரங்களை அளித்து வருகிறோம். இது முன்னேற்றத்திற்கான பெரிய பங்கு.


கேள்வி:
 நெட் நியூட்ராலிட்டி பற்றி?

பதில்:
 ஜீரோ ரேட் தயாரிப்புக்கள் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மீனவர்களும் இதை பயன்படுத்தி தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம்.


கேள்வி : 
தாஜ்மஹால் சென்ற அனுபவம் பற்றி

பதில்:
 தாஜ்மஹால் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அது காதலின் அடையாளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us