தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆர்.கே., நகர் தொகுதியில் புதிய அரசு கல்லூரி திறப்பு

ஆர்.கே., நகர் தொகுதியில் புதிய அரசு கல்லூரி திறப்பு

ஆர்.கே., நகர் தொகுதியில் புதிய அரசு கல்லூரி திறப்பு


UPDATED : அக் 29, 2015 12:00 AM

ADDED : அக் 29, 2015 10:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2015 12:00 AM ADDED : அக் 29, 2015 10:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
: முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற
, சென்னை, ஆர்.கே., நகர் சட்டசபை தொகுதியில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம், நேற்று திறந்து வைத்தார்.

ஆர்.கே., நகர் எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டசபை தொகுதியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, செப்., 29ல், சட்டசபையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆர்.கே., நகர் தொகுதிக்கு உட்பட்ட, தண்டையார்பேட்டையில் உள்ள, சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளி கட்டடத்தில், புதிய, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை, நடப்பாண்டில் துவக்க, முதல்வர் உத்தரவிட்டார்.ஆசிரியர் மற்றம் பணியாளர் பணியிடங்கள் உருவாக்கவும், மரத் தளவாடங்கள், புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள் வாங்கவும், 8.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று, புதிய கல்லுாரியை, கோடநாடு முகாம் அலுவலகத்தில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஐந்து மாணவ, மாணவியருக்கு, சேர்க்கை அனுமதி கடிதங்களை வழங்கினார். அவர்களை, நன்றாக படித்து, முன்னுக்கு வர வேண்டும் என, வாழ்த்தினார். சென்னையில், 41 ஆண்டுகளுக்கு பின், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்லுாரி துவக்க விழாவில், அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலர் ஞானதேசிகன், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us