தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி


UPDATED : அக் 30, 2015 12:00 AM

ADDED : அக் 30, 2015 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2015 12:00 AM ADDED : அக் 30, 2015 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி.,யில், 20 மாணவர்களுக்கு, டெங்கு பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., வளாகத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், 20 பேர், ஒரு வாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உள்வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், டெங்கு காய்ச்சல் அறிகுறி ஆரம்ப கட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது; சிலருக்கு விடுப்பு அளித்து, ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஐ.ஐ.டி., வளாகத்தில், சென்னை மாநகராட்சி சார்பில், டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. டெங்கு அறிகுறி தெரிந்தால், உடனடி சிகிச்சைக்காக, நிலவேம்பு கஷாய பவுடர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஐ.ஐ.டி.,யின் மாணவர் நலத் துறை முதல்வர் சிவகுமார் கூறுகையில், டெங்கு பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, நாங்களே டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us