பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு; மறுகூட்டல் விண்ணப்பம்
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு; மறுகூட்டல் விண்ணப்பம்
UPDATED : அக் 30, 2015 12:00 AM
ADDED : அக் 30, 2015 11:19 AM
பொள்ளாச்சி
: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டலுக்கு, வரும், 2ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம், என, கல்வி மாவட்ட அலுவலர்
தெரிவித்தார்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், செப்., 28 முதல், கடந்த, 6ம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் ஆன்லைன்ல் வெளியிடப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ் ஆன்-லைனில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; வரும், 2ம் தேதி முதல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் நடராஜன் கூறியதாவது
:
மறு கூட்டலுக்கு, வரும், 2 முதல், 4ம் தேதி வரை, அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரிடையாக சென்று, ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். http://supl.sslc15rt.in என்ற இணையதள முகவரியில், மறு கூட்டல் கோரும் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கு, 305 ரூபாயும், ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும், 205 ரூபாயும், 50 ரூபாய், ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, நடராஜன் கூறினார்.
