UPDATED : நவ 07, 2015 12:00 AM
ADDED : நவ 07, 2015 10:51 AM
அ நிறம் | அளவு
சென்னை
: துாய்மையான
பள்ளித் திட்டத்தில், 15ம் தேதி வரை, சுத்தம், சுகாதாரம் குறித்த நிகழ்ச்சிகள் நடத்த
உத்தரவிடப்பட்டு உள்ளது.
மத்திய இடைநிலை
கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், நவோதயா பள்ளிகள் மற்றும் மாநில
பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,
சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், பள்ளி மாணவர்களுக்கு வெறும் பாடம், வகுப்பு என்றில்லாமல், அவர்களுக்கு புரியும் விதமாக படம் வரைதல், கட்டுரை எழுதுதல், வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருத்தல், சுத்தமான குடிநீர், உணவு ஆகியவை குறித்து, போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
