ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள் தொழில் துவங்க முத்ரா கடன்
ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள் தொழில் துவங்க முத்ரா கடன்
UPDATED : நவ 14, 2015 12:00 AM
ADDED : நவ 14, 2015 10:33 AM
நாமகிரிப்பேட்டை
:
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை கார்ப்ரேஷன் வங்கியில்,
சிறுதொழில் வளர்ச்சி முகாம் கூட்டம் நடந்தது.
வங்கியின் மண்டல பொது மேலாளர் தங்கராஜ் தலைமை வகித்து கூறியதாவது:
கடந்த இரண்டு மாதத்தில், 102 கோடி ரூபாய் முத்ரா கடன் வழங்கியுள்ளோம். மார்ச் முடிவதற்குள், 1,242 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக, ஐ.டி.ஐ., படிப்பு முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளோம். நாமக்கல் அடுத்த, கீரம்பூர் பகுதியில் உள்ள ஐ.டி.ஐ., நிறுவனம் மூலம், இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
சிறு தொழில் தொடங்க கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் அமைத்துள்ளோம். வரும், ஜனவரி, 31ம் தேதிக்குள், 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
