UPDATED : நவ 14, 2015 12:00 AM
ADDED : நவ 14, 2015 10:34 AM
சிவகங்கை
: நமது
பாரம்பரியமிக்க கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையிலும், கலைகள் அழியாமல் போற்றி பாதுகாக்கும் நோக்கிலும் மத்திய அரசின்
அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பில், மாநில கலா உத்தேவ் போட்டி நாமக்கல்லில் கடந்த மாதம்
நடந்தது.
இதில், 6 -10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்றவர்கள் செட்டிநாடு ஓவியம், காவடி, கரகம், ஒயிலாட்டம், தப்பாட்டம், தாலாட்டு உட்பட பல்வேறு கலைகளை நிகழ்த்தி காட்டினர். மறைந்து வரும் கிராமிய தெம்மாங்கு, ஒப்பாரி, தாலாட்டு பாடல்களை தத்ரூபமாக பாடினர். மாநில அளவில் முதலிடம் கிடைத்தது. இக்குழுவில், மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி கே. கார்த்திகா, பாகனேரி அரசு உயர் நிலைப்பள்ளி கே.நந்தினி, திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப் பள்ளி ஆர்.ராகவி, சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி காயத்ரி, மல்லல் ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளி பி.சரவண சூரி,, பூவந்தி அரசு உயர் நிலைப்பள்ளி ஏ.லட்சுமணன், எம்.மோகன், டி.புதுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எம்.ஜெயபாண்டி, டி.யோகேஷ்வரன், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி அய்யன் கிருஷ்ணசாமி இடம் பெற்றுள்ளனர்.
டிச.,8.9,10ந்தேதியில் டில்லியில் நடக்கும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில்,
இவர்கள் பங்கேற்கின்றனர். டில்லிக்கு அனுப்பும்
ஏற்பாடுகளை சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் மேற்கொண்டுள்ளது.
