UPDATED : நவ 17, 2015 12:00 AM
ADDED : நவ 17, 2015 11:11 AM
கோவை
: மாவட்ட
அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மலுமிச்சம்பட்டி, நேரு மஹா வித்யாலயா கலை அறிவியல்
கல்லுாரியில் நடந்தது.
இளம்
விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கத்தோடும், அவர்களின்
அறிவியல் படைப்பு மற்றும் ஆய்வுத் திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை மற்றும் கோவை மாவட்ட
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய
குழந்தைகள் மாநாடு கோவையில் நடத்தப்பட்டது.
வானிலை மற்றும்
தட்பவெப்ப நிலையை புரிந்து கொள்வோம் எனும் தலைப்பில்
கீழ், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள்
ஆய்வுகளை சமர்ப்பித்தனர். இதில், எட்டிமடை, நல்லாம்பாளையத்திலுள்ள அமிர்த வித்யாலயா பள்ளி, பி.எஸ்.ஜி., கன்யா குருகுலம் பள்ளி, மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணபதி சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த,
6 குழுக்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு
அறிவியல் இயக்க மாநில தலைவர் மோகனா கூறுகையில், குழந்தைகள் பிறக்கும் போதே, அறிவியல்
தன்மையோடு பிறப்பதில்லை. அவர்களிடம் இருக்கும், இயற்கை அறிவியல் தன்மையும், தேடலும்தான்,
அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், என்றார்.
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு, கல்லுாரி செயலாளர் அசோக்குமார், முதல்வர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
