UPDATED : நவ 17, 2015 12:00 AM
ADDED : நவ 18, 2015 04:57 PM
ஆந்திரா
:
புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில், நான்கு நாட்கள் நடைபெற்று வந்த, ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினி நிகழ்ச்சி
(17-11-2015)அன்று நிறைவடைந்தது.
குல்வன்ட்
ஹால்லில், காலை நடைபெற்ற
சிறப்பு நிகழ்ச்சியில் 100க்கும், மேற்பட்ட
தொண்டர்கள் பங்கேற்று தங்களது பங்களிப்பை அளித்தனர். நிறம், கருணை மற்றும் பக்தியை வெளிப்படுத்தும் வகையில்,
இரண்டு வகையான நடன நிகழ்ச்சிகளை, ஸ்ரீ சத்ய சாய் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி,
அம்பத்தூர்- தமிழ்நாடு மற்றும் ஸ்ரீ சத்ய
சாய் வித்யா விஹார் பள்ளி - ஒடிசா, ஆகிய இரண்டு பள்ளி
மாணவர்களும் இணைந்து நடனமாடினர். அதைத் தொடர்ந்து, நவ்சாரி, மற்றும்
குஜராத்தில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் வித்யா நிகேதன்,பள்ளி மாணவர்களின் ’கற்பா’ நடனம்
இடம்பெற்றது. பகவான் தாமரை பாதங்களுக்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் ’பகவத் வாணி பகவத் வாஹினி’ என்ற தலைப்பில், 15 வித்யா வாஹினி பள்ளிகளில் இருந்து 300 க்கும்
மேற்பட்ட மாணவர்கள் இசை நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர்.
பேராசிரியர், மது கபானி (முதல்வர், எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல், அனந்தபூர்) மற்றும் முன்னாள் துணை வேந்தர், பேராசிரியர், விஸ்வநாத் பண்டிட் (எஸ்.எஸ்.எஸ்.ஐ.எச்.எல்) ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
