தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினி; ஐந்தாவது ஆண்டுவிழா!

ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினி; ஐந்தாவது ஆண்டுவிழா!

ஸ்ரீ சத்ய சாய் வித்யா வாஹினி; ஐந்தாவது ஆண்டுவிழா!


UPDATED : நவ 17, 2015 12:00 AM

ADDED : நவ 18, 2015 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2015 12:00 AM ADDED : நவ 18, 2015 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரத திக்விஜயம் மற்றும் பாரடியம் என்ற தலைப்பில்,சுமார் 1,200 குழந்தைகள், யஜுர் மந்திரத்திலிருந்து சாய் குல்வன்ட் ஹால் வரை, நடைபெற்ற பேரணியில் பங்கேற்றனர்.

18 காட்சி அமைப்புகள்

ஆதி சங்கராச்சார்யா மற்றும் அவரின் நான்கு முக்கிய சீடர்களின் ஆன்மிக வாழ்க்கை, கலாச்சாரம், நிலம் மற்றும் ஆன்மீக பாரம்பரியம் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேத கதைகள், கோவில் புனைவுகள், இசைக்கருவிகள், வீர கதைகள், தாய்மையின் பெருந்தன்மை, சுதந்திர இயக்கம், இந்திய சுதந்திரப் போராளிகள் பற்றின கதைகள், பகவத் கீதை போன்ற 18 வகையான காட்சி அமைப்புகள் பேரணியில் இடம்பெற்றன.

ஸ்ரீ சத்ய சாய் தொடக்கப் பள்ளி மாணவர்கள், ’சத்தியம் ஜனனம் ஆனந்தம் சாய்’ என்ற தலைப்பில் ஆத்மா வித்யா என்னும் ஆன்மா இசை நாட்டிய நாடக நிகழ்ச்சியை அரங்கேற்றினர். அதைத் தொடர்ந்து, தனிப்பட்ட மனிதனின் ஆத்ம கூறை வெளிப்படுத்தும் வகையில், ’எதுவும் எல்லாம், எல்லாம் எதுவும் இல்லை’, என்ற வரிகளின் மிக உயர்ந்த வேதாந்த உண்மையை, நாடகம் வாயிலாக மாணவர்கள் உணர்த்தி காட்டினர்.

சாய்-பாணியில்..,

நாற்பது நிமிடங்கள் தொடர்ந்த விரிவுரையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் போன்றவர்களின் வாழ்க்கை முறை, போதனைகள், மற்றும் ஆத்மாவின் வடிவமானது நேர்மறை மற்றும் உருவமற்ற நிலையிலும், வடிவம் மற்றும் வடிவத்தில் இல்லாமலும் பிரபஞ்ச சாராம்சத்தில், இயங்குகிறது என்ற பிரம்மா சத்ய அடிப்படை உண்மைகளை மாணவர்கள் கவிதை நயம், நடனங்கள், ஸ்கிட்டுகள் மற்றும் காணொளிகள் உதவியுடன் பார்வையாளர்களுக்கு விளக்கினர்.

குழந்தைகள், பகவான் சாய்-பாணியில், நேர்த்தியுடன் அழகான நடனம் மற்றும் பாடல் காட்சிகளைக் கலந்து, பார்வையாளர் கண்களுக்கு விருந்தளித்தனர். அதுமட்டுமின்றி ஆதி சங்கரர் மற்றும் அவரின் நான்கு சீடர்கள் போன்று வேடம் அணிந்திருந்த குழந்தைகள், பாரதிய கலாச்சாரத்தில் இடம்பெற்ற ஆன்மீக காட்சி தனித்துவத்தை விளக்கின காட்சிகள் மிகவும் நேர்த்தியான அமைந்திருந்தன. அதன்பின், பஜனைகள் தொடர்ந்து, மாலை 6 மணியளவில், மங்கள ஆரதியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ஸ்ரீ கே. சக்ரவர்த்தி (நிர்வாக அறங்காவலர்-ஸ்ரீ சத்ய சாய் சென்டல்) விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து சந்திரசேகரன் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) சிறப்புரையாற்றினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us