தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அக்னி சிறகுகள் போட்டி மாணவர்கள் உற்சாகம்

அக்னி சிறகுகள் போட்டி மாணவர்கள் உற்சாகம்

அக்னி சிறகுகள் போட்டி மாணவர்கள் உற்சாகம்


UPDATED : நவ 23, 2015 12:00 AM

ADDED : நவ 23, 2015 11:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2015 12:00 AM ADDED : நவ 23, 2015 11:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்(அவிநாசி): தெக்கலூரில் உள்ள நிகிதா பள்ளியில், அக்னி சிறகுகள் எனும் பெயரில், நீ யாரென உலகுக்கு காட்டு என்ற தலைப்பில், மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணர, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி பகுதியில் உள்ள, 30 பள்ளியை சேர்ந்த, 900 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஸ்ரீசக்தி கல்வி குழுமங்களின் தலைவர் தங்கவேலு துவக்கி வைத்தார். இயற்கை இணைந்த கல்வி, அறிவியல் பயன்பாடு, புகைப்படம், நகைச்சுவை, பேச்சு, ஓவியப்போட்டி, சிலம்பாட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என, பல்வேறு தலைப்புகளில், போட்டி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றன.

இதில், பாரம்பரிய கால்நடையை பாதுகாப்பது எவ்வாறு என்ற தலைப்பில், கொங்க கோசாலா நிறுவனர் சிவக்குமார், ஏ2 பாலின் நன்மைகள் என்ற தலைப்பில், மகப்பேறு மருத்துவர் பானுமதி, இளம் அறிவியல் விஞ்ஞானி என்ற தலைப்பில், நேட்டீவ்லிட் பவுண்டேசன்' நிறுவனர் சிவராஜ், அக்வீடிஸ் குளோபல் நிறுவன நிர்வாகி விஜயகுமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பரிசளிப்பு விழாவில், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சசிக்குமார் சிறப்புரை ஆற்றினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இயற்கையை பாதுகாப்பது குறித்த கானுயிர் புகைப்பட கண்காட்சி, கற்றல் சார்ந்த நிகழ்ச்சியாக, மண் பாண்டங்கள் செய்முறை ஆகியன நடைபெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us