தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேவை மையத்தில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சேவை மையத்தில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சேவை மையத்தில் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 23, 2015 12:00 AM

ADDED : நவ 23, 2015 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2015 12:00 AM ADDED : நவ 23, 2015 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுக்கு
, தாலுகா அலுவலகத்தில் உள்ள, சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசு கேபிள் "டிவி&' நிறுவனம், தாலுகா அலுவலகம்தோறும், இ-சேவை மையம் அமைத்துள்ளது. வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக நலத்துறை விண்ணப்பங்கள், பிளாஸ்டிக் ஆதார் அட்டை, ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்றும் வசதி, பாஸ்போர்ட் விண்ணப்பம் உட்பட, பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது, அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிரந்தர பதிவுக்கு, 50 ரூபாய், தேர்வுக்கு விண்ணப்பிக்க, 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் மாறுதல் செய்ய, ஐந்து ரூபாய் செலுத்தினால் போதும்; மேலும், 20 ரூபாய் செலுத்தி, மாறுதல் செய்த விண்ணப்ப நகலை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டணங்களை, அந்தந்த சேவை மையங்களிலேயே செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி, அதுக்கான ஒப்புதல் ரசீதை பெற்றுக்கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு விண் ணப்பிக்க விருப்புவோர், தாலுகா அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையங்களை பயன்படுத்தி, பயனடையலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us