UPDATED : நவ 23, 2015 12:00 AM
ADDED : நவ 23, 2015 11:13 AM
புதுச்சேரி
:
பாடங்களை முழுமையாக படித்தால் 1 மதிப்பெண் வினாக்கள் அத்தனைக்கும்
பதில் அளிக்க முடியும் என, பிளஸ் 2 பாடம் குறித்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கருத்துரை
வழங்கினர்.
இயற்பியில்
தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் முழு
மதிப்பெண் பெற, 2006ம் ஆண்டு முதல் இது வரையுள்ள 29 வினாத் தாள்களை படிக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள வரிகளை முழுமையாக
பலமுறை படித்தும், உணர்ந்தும் விளக்கம் பெற்றால்
முழுமையாக 1 மதிப்பெண் வினாக்களுக்கு விடை அளிக்க
முடியும்.
ஐந்து மதிப்பெண்
முழுமையாக பெற பாடம் 2, 7, ல் உள்ள கேள்விளுக்கு விடைகளை தயார்
செய்ய வேண்டும். அனைத்து பாடங்களிலும் தன்னறிவு வினாக்காளில் உள்ள கணக்கீடுகளை
தீர்வு காண முயற்சி செய்தால், கட்டாயமாக எழுத வேண்டிய கணக்கை
பயமின்றி எதிர்கொள்ளலாம். 10 மதிப்பெண் வினாக்களுக்கு 1, 4,
5, 6, 8, 9 பாடங்களில் இது வரை தேர்வுகளில் வெளியாகியுள்ள
வினாக்களுக்கு விடையை தயார் செய்தால் முழுமையாக 40 மதிப்பெண்கள் பெறலாம்.
கருணாகரன்
(கணிதம்): கணித பாடங்களில் முழுமையாக மதிப்பெண் பெற பயிற்சி அவசியம். கடினமான
வினாக்கள் என எதையும் விடக் கூடாது. ஒரு மதிப்பெண் வினாவை முழுமையாக விடை
அளிக்கும் வகையில், பாடத்தில் முழுமையாக அறிந்து
வைத்திருக்க வேண்டும்.
விரைவாக தேர்வு
எழுதும் வகையில், அடிக்கடி கணக்குகளை போட்டுப் பார்க்க
வேண்டும். புரிந்து படித்தால் அதிக மதிப்பெண் குவிக்கலாம்.
செம்பியான்
(வேதியியல்): வேதியியல் பாடத்தை பொருத்த வரை, பாடத்தை முழுமையாக தெளிவாக படித்தால், ஒரு மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண்,
கட்டாய வினாக்களுக்கு கண்டிப்பாக விடை அளிக்க
முடியும். முழுமையான மதிப்பெண் பெறலாம். கணக்கீடுகளை தனியாக எழுதி வைத்து திரும்ப
திரும்ப படிக்க வேண்டும். சமன்பாடுகள் சரியாக எழுதி பயிற்சி எடுக்க வேண்டும்.
முக்கிய கருத்துக்களை கருப்பு மையில் கோடிட்டு காட்ட வேண்டும்.
முல்லைவாணன்
(தாவரவியல்): தாவரவியலில் வரைபடம் மிகவும் அவசியமானது. படங்களை தெளிவாக வரைந்தாலே
போதும். அதற்காக கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண் டாம். நேர மேலாண்மை கடைபிடித்து,
கேட்டுள்ள கேள்விகளை புரிந்து விடையளிக்க
வேண்டும். தாவரங்களின் பண்புகளை ஒப்பிட்டு படித்தால் அனைத்து வினாக்களுக்கும் விடை
அளிக்க முடியும்.
சுந்தர்
(விலங்கியல்): விலங்கியல் பாடம் மிகவும் எளிதான பாடம். தேர்வை முழுமையாக, நிதானமாக எழுத வேண்டும். தலைப்பு, துணை தலைப்பு மற்றும் தொழில்நுட்ப வார்த்தைகளை கோடிட்டு காட்ட
வேண்டும். குறைந்தது மூன்று முறையாவது புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்.
அப்போது தான், தற்போது கேட்கும் கேள்விகளுக்கு சரியான
பதில் அளிக்க முடியும். முக்கிய வார்த்தைகளை தனியாக எழுதி, திரும்ப திரும்ப வாசித்து பயிற்சி எடுக்க வேண்டும். பத்தி பிரித்து,
தெளிவாக எழுதினால், முழு மதிப்பெண் கிடைக்கும்.
கண்ணன்
(கம்ப்யூட்டர் சயின்ஸ்) : கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் அனைத்து பாடங்களையும்
படித் தால் தான் முழுமையான மதிப்பெண் பெற முடியும். பொறியியில் படிப்பிற்கு,
கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அடிப்படையாக
உள்ளது. ஆர்வத்துடன் படித் தால் 200 மதிப்பெண் பெற முடியும்.கணிதம்,
இயற்பியல் பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்
துவத்தை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கும் தர வேண்டும். பாடத்தை படிப்பதை விட,
பிராக்டிக்கல்தான் முக்கியம்.
ஸ்ரீதர் ( வணிக
கணிதம்): வணிக கணிதத்தில் 200 மதிப்பெண்களில் 40 மதிப்பெண் ஒரு மார்க் கேள்வியில் பெற்று விட முடியும். பாடங்களில்
கேட்டுள்ள எடுத்துக் காட்டுக்களை, தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.
புரிந்து கொண்டு, நிதானத்துடன் தொடர்ந்து பயிற்சி
செய்தால், 200 மதிப்பெண்களை முழுமையாக பெறலாம்.
சிவராம ரெட்டி
(வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல்) பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவில்,
முழுமையாக படிக்க வேண்டும். அப்போது தான்,
ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முழுமையாக பதில்
அளிக்க முடியும். கணக்குப்பதிவியலில், சரியான கேள்வியை
தேர்வு செய்து எழுத வேண்டும். வணிகவியலில், தேர்வு செய்யும் கேள்விகளுக்கு சுருக்கமாக, தெளிவாக பதில் இருக்க வேண்டும். பாடங்களை திரும்ப, திரும்ப படித்து பயிற்சி எடுத்தால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
சாமிநாதன் (பொருளாதாரம்): பொருளாதார பாடத்திற்கு, நேர மேலாண்மை முக்கியம். 1 மதிப்பெண் வினாவிற்கு 20 நிமிடங்களும், 3 மதிப்பெண் வினாக்களுக்கு 30 நிமிடமும், 10 மதிப்பெண் மற்றும் 20 மதிப்பெண் வினாக்களுக்கு தலா 60 நிமிடங்களை ஒதுக்க வேண்டும். முதல் பாடத்தில் இருந்து 7ம் பாடம் வரை முழுமையாக படித்தாலே 169 மதிப்பெண் பெறலாம். வரைபடங்கள், வாக்கியங்களை கண்டிப்பாக படிக்க வேண்டும். கேள்விகளுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில் அளித்தால் மதிப்பெண் முழுமையாக கிடைக்கும்.
