ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கோவையில் விரைவில் துவக்கம்
ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் கோவையில் விரைவில் துவக்கம்
UPDATED : நவ 23, 2015 12:00 AM
ADDED : நவ 23, 2015 11:16 AM
கோவை மாவட்ட மைய நுாலகத்தில், விரைவில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவக்கப்பட உள்ளது, என, மாவட்ட நுாலக அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம்
கிளை நுாலகத்தில், 48வது தேசிய நுாலக வாரவிழா நடந்தது.
மாவட்ட நுாலக ஆணைக்குழு முன்னாள் உறுப்பினர் உமா தலைமை வகித்தார். மாவட்ட நுாலக
அலுவலர் கார்த்திகேயன் விழாவில் பேசியதாவது:கோவை மாவட்டத்தில், 247 நுாலகங்கள் உள்ளன. நகர பகுதிகளில் கிளை நுாலகங்கள், கிராமங்களில் ஊரக மற்றும் பகுதி நேர நுாலகங்கள் உள்ளன.
மாணவர்கள் இடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்த, ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஏராளமான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட நுாலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், சிறுவர்களுக்கும் என தனியாக நவீன வசதிகளுடன் கூடிய நுாலகம் உள்ளது. பார்வையற்றோருக்கு பிரெய்ல் முறையில் படிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் விரைவில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவக்கப்பட உள்ளது.
மாவட்ட மற்றும் தாலுகா அளவில் உள்ள நுாலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான
பாடப்புத்தகங்கள் உள்ளன. அதில் உள்ள பகுதியை ஜெராக்ஸ் எடுக்க வசதி
செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள், இதை நன்கு
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கார்த்திகேயன்
பேசினார்.
