தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கவுரவம்; பார்லிமென்டில் குறள் சொல்ல தேர்வு

மாணவர்களுக்கு கவுரவம்; பார்லிமென்டில் குறள் சொல்ல தேர்வு

மாணவர்களுக்கு கவுரவம்; பார்லிமென்டில் குறள் சொல்ல தேர்வு


UPDATED : நவ 30, 2015 12:00 AM

ADDED : நவ 30, 2015 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2015 12:00 AM ADDED : நவ 30, 2015 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்
: வரும்
, 17ல் பார்லிமென்ட்டில் நடைபெறும் விழாவில், குறள் சொல்வதற்கு, திருப்பூர் மாணவி, அவிநாசி மாணவன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளுவர் மற்றும் தமிழ் மொழி மீது பற்றுகொண்ட எம்.பி., தருண் விஜய், திருக்குறள் ஒப்புவிக்கும், மாணவர்களை தேர்வு செய்ய திட்டமிட்டார். கடந்த, 1ல், மதுரை மகாத்மா பள்ளியில் நடந்த போட்டியில், மாநிலம் முழுவதும், 300 பள்ளிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிறப்பான இடத்தை பிடித்த, 133 பேர், பார்லிமென்ட் உள்ளரங்க வளாகத்தில், 17ல் நடைபெற உள்ள விழாவில், திருக்குறள் சொல்கின்றனர். அப்போதே பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதில் பங்கேற்க, திருப்பூர் எம்.என்., சிக்கண்ண செட்டியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி படிக்கும், அப்பாச்சி நகர் இரண்டாவது வீதியை சேர்ந்த கார்த்திகேயன் - பாக்யம் தம்பதி மகள் ஓவியா, அவிநாசி கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும், தெக்கலூர் சண்முகசுந்தரம் - ரேணுகாதேவி தம்பதி மகன் ஹரி கிருஷ்ணன், 15, ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

ஓவியா கூறுகையில், நான்காம் வகுப்பு படிக்கும்போதே, 1,330 குறளையும் மனப்பாடம் செய்து விட்டேன். 25 அதிகாரங்களில் உள்ள, 250 திருக்குறள்களில் முதல் சீர், கடைசி சீர் எதை குறிப்பிட்டாலும், அக்குறளை சொல்ல வேண்டும்; குறள் எண் கூறினாலும், அடிபிறழாமல் ஒப்பிக்க வேண்டும். அப்ஜெக்டிவ் முறையில், சென்னை பல்கலை வடிவமைத்த வினாத்தாளில், திருக்குறள் சார்ந்த வினாக்களுக்கு பதிலளித்து வெற்றி பெற்றேன். டில்லியில் நடக்கும் விழாவில் பங்கேற்பது, மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.

ஹரிகிருஷ்ணன் கூறுகையில், பள்ளி சென்று வந்ததும், குறளை படித்து எழுதிப்பார்ப்பேன். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில், தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திருக்குறள் கூறிய வழியில் வாழ்வதே எனது லட்சியம், என்றார்.

ஹரிகிருஷ்ணனை, அவிநாசி கல்வி நிலைய அறகட்டளை அறங்காவலர்கள், தலைமையாசிரியை வேலுமணி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us