தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்மாதிரியாக செயல்படும் அரசுப்பள்ளி

முன்மாதிரியாக செயல்படும் அரசுப்பள்ளி

முன்மாதிரியாக செயல்படும் அரசுப்பள்ளி


UPDATED : டிச 05, 2015 12:00 AM

ADDED : டிச 05, 2015 04:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2015 12:00 AM ADDED : டிச 05, 2015 04:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை என்றாலே மழையும், குளிரும், பனியும் தான் நினைவுக்கு வரும். என்ன தான் சீதோஷ்ண நிலை மாறினாலும், கல்வி கற்பதில் மலைப்பகுதி மாணவர்களின் உற்சாகம் வேறு யாருக்கும் வராது. 

அந்த அளவுக்கு எந்த மாதிரி சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல், அன்றாடம் பள்ளிக்கு தவறாமல் வரும் மாணவர்களின் எண்ணிக்கை தான் அதிக அளவில் உள்ளது. அது ஆகாதப்பா; நாம கஷ்டப்பட்டு பணம் செலவு பண்ணியாவது பிரைவேட் ஸ்கூல குழந்தைகளை சேர்க்கணும் என்று அடம் பிடிக்கும் பெற்றோர்களுக்கு சவால்விடும் அளவுக்கு, வால்பாறை நகரில் ஒரு பள்ளி உண்டு என்றால், அது வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தான்.

நகரின் மத்தியில், 1940ம் ஆண்டு துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தற்போது, 87 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இன்றைய சூழலில், அரசுப்பள்ளிகளின் நிலையை உயர்த்த கல்வித்துறை, வித்தியாசமான முயற்சிகள் பலவும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், அதில் ஒரு சில பள்ளிகள் மட்டுமே வெற்றியடைவதோடு தொடர்ந்து அம்முயற்சிகளை பின்பற்றியும் வருகிறது. 

இப்பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளில், பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதோடு, மாணவர்களே ஆர்வத்தோடு கல்வி பயில வரும் சூழலாகவும் மாறியுள்ளது. மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்களே பள்ளியை முன்னேற்றபாதையில், வழிநடத்திச்செல்கின்றனர். 

பள்ளியின் சிறப்புகள்

மாணவர்களுக்கு நற்பண்புகளை, கற்றுத்தருவதும், அதனை பின்பற்றச்சொல்வதும் ஆசிரியர்கள் அதனை கண்காணிப்பதும் வழக்கமான ஒன்று. இப்பள்ளியில் மாணவர்களே கண்காணிப்பு பணிகளிலும், ஈடுபட்டு, மற்ற மாணவர்களையும் சுகாதார பழக்கங்களை பின்பற்றச்செய்கின்றனர். 

மாணவர்களின் கல்வித்திறன்களை வளர்க்கும் வகையில், அவர்களுக்கு ஏ.பி.எல்., மற்றும் எஸ்.ஏ.பி.எல்.,முறையில் அவர்களுக்கு பாடம் சொல்லித்தரப்படுகிறது. இது தவிர மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் அவர்களுக்கு, நாள் தோறும் காலை, மாலை யோகா பயிற்சி, கலை பயிற்சி போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி கூறியதாவது: 

மாணவர்களுக்கு சிறந்த கல்வி கற்பிப்பது ஆசிரியர்களின் கடமை. ஆனால், சிறந்த மாணவர்களாக உருவாக்கவும், படிக்கும் பள்ளியை பிடித்தமான சூழலாக மாற்றுவது ஆசிரியர்கள் பெருமையாக கருத வேண்டும். இதை நினைவில் கொண்டு எங்கள் பள்ளியில் படிக்கும் சில குழந்தைகள், அதிகாலை நேரத்தில் பெற்றோர்கள் கூலி வேலைக்கு செல்வதால், அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பி வருகின்றனர்.

குளிக்காமல் வரும் மாணவ, மாணவிகளை நாங்களே பள்ளியில் குளிக்க வைத்து, அவர்களுக்கு புத்தாடையும் வழங்குகிறோம். சுத்தம் சுகம் தரும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு பல்வேறு உதவிகளை ஆசிரியர்கள் செய்துவருகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரையும் எங்கள் குழந்தைகளாக பாவித்து அவர்களை நல்வழிப்படுத்துவதில் எங்கள் ஆசிரியர்களின் முனைப்புடன் பணியாற்றிவருகின்றனர் என்றால் அது மிகையானது. இவ்வாறு கலைச்செல்வி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us