UPDATED : டிச 05, 2015 12:00 AM
ADDED : டிச 05, 2015 04:14 PM
திருப்பூர்
: தேசிய இளைஞர் விழாவையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
சார்பில், மாவட்ட அளவிலான கலை, இலக்கிய
போட்டித்தேர்வு, திருப்பூர்
நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது.
நாட்டுப்புற நடனம், கிராமியப்பாட்டு,
ஓரங்க நாடகம் (ஆங்கிலம்
அல்லது இந்தி), கர்நாடக சங்கீதம்,
இந்துஸ்தானிய இசை,
பேச்சுப்போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சித்தார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரத நாட்டியம்,
கதக், குச்சுப்புடி மற்றும் ஒடிசி நடனம் ஆகியன,
இடம் பெற்றிருந்தன.
நாட்டுப்புற நடனத்தில், ஏ.கே.ஆர்.,
அகாடமி சுமித்ரா; குழு நடனத்தில், ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் தேர்வாகினர். கதக்
நடனத்தில், ஜெய்வாபாய் பள்ளி
ரித்திகா; நாட்டுப்புற
பாட்டில், முரட்டுப்பாளையம்
அரசு பள்ளி மோகன்; ஆங்கில பேச்சுப்போட்டியில்,
ஏ.வி.பி., டிரஸ்ட் தோபிர்கா; கர்நாடக சங்கீதத்தில், விகாஸ் வித்யாலயா தனஞ்செயன் வெற்றி பெற்றனர்.
தமிழ் பேச்சுப்போட்டியில், பொள்ளாச்சி
நகராட்சி பெண்கள் பள்ளி கேத்தரின் ஜெய்சி; கிடாரில் ஏ.வி.பி., டிரஸ்ட்
ஜோஸ்ஜெப்ரி பெர்னார்ட்; டிரம்ஸ்சில்,
நஞ்சப்பா பள்ளி பிளெசன்
டேனியல்; கீ போர்டில்,
சாரதா வித்யாலயா தயாநிதி;
பரத நாட்டியத்தில்,
செஞ்சுரி பவுண்டேஷன்
ஆசிரியை சரண்யா, எல்.ஆர்.ஜி.,
மாணவி விஷாலினி ஆகியோர்
தேர்வாகினர்.
போட்டி ஏற்பாடுகளை, மாவட்ட
விளையாட்டு அலுவலர் சவுந்தரராஜன் செய்திருந்தார். தேர்வாகியுள்ள அனைவரும், திருச்சியில், வரும், 7ல், நடைபெற உள்ள, மாநில போட்டியில்
பங்கேற்க உள்ளனர்.
