தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் தேர்வு தள்ளிப்போகுமா?

சிவில் சர்வீஸ் தேர்வு தள்ளிப்போகுமா?

சிவில் சர்வீஸ் தேர்வு தள்ளிப்போகுமா?


UPDATED : டிச 08, 2015 12:00 AM

ADDED : டிச 08, 2015 10:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2015 12:00 AM ADDED : டிச 08, 2015 10:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தவிப்பு

ராஜ்யசபாவில், தி.மு.க., எம்.பி.,யான சிவா நேற்று பேசியதாவது: வெள்ள பாதிப்புகளிலிருந்து, தமிழகம் இன்னும் மீளவில்லை. உணவு, மின்சாரம், தொலை தொடர்பு என, அடிப்படை வசதிகள் எதுவுமின்றி, மக்கள் தவிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள் பல, மூன்று தளங்கள் வரை மூழ்கிக் கிடக்கிறது. மக்களின் உடைமை கள், முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் புத்தகங்கள், சான்றிதழ்கள் எல்லாமே நாசமாகி விட்டன. குறிப்பாக, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு, பல மாதங்களாக, தங்களை தயார் செய்து வந்த மாணவர்கள் பலரின் புத்தகங்கள், எழுதுபொருட்கள் போன்றவற்றை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு, மாணவர்கள் தங்களை தயார் செய்ய வேண்டுமெனில், பல மணி நேரம் படிக்க வேண்டும்; கடின உழைப்பு மேற்கொள்வது அவசியம். இவற்றுக்கு, தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலை ஏற்புடையது அல்ல. அனைத்து மாநில மாணவர்களோடும் போட்டியிட, மனம் மற்றும் உடல்ரீதியாக தமிழக மாணவர்கள்,

தங்களை தயார்படுத்த அவகாசம் தேவை. எனவே, 18ம் தேதி நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் மெயின் தேர்வை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பரிசீலனை

இதற்கு பதிலளித்த, பார்லிமென்ட் விவகார இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இது குறித்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கையை மத்திய அரசு நிச்சயம் எடுக்கும்,என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us