தேசிய இளைஞர் விழா; மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள்
தேசிய இளைஞர் விழா; மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள்
UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 11:00 AM
கிருஷ்ணகிரி
:
தேசிய இளைஞர் விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள்
கிருஷ்ணகிரியில் நடந்தது.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில், 20 வது தேசிய இளைஞர் விழா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், வரும் ஜனவரி, 12ம் தேதி முதல், 16ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், 13 முதல், 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாட்டு, ஆங்கில, இந்தி நாடகம், கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், பேச்சு போட்டி, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிசி நடனம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, கிடார், தபேலா வாசித்தல் அகிய பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில், மாவட்ட அளவில், முதலிடம் பெறும் நபர்கள் வரும், 10ம் தேதிக்குள் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
