UPDATED : டிச 08, 2015 12:00 AM
ADDED : டிச 08, 2015 11:18 AM
அ நிறம் | அளவு
சென்னை
:
கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளையும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மற்றும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
