தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பீஜிங்கில் ’ரெட் அலர்ட்’ பள்ளி, கல்லூரிகள் மூடல்

பீஜிங்கில் ’ரெட் அலர்ட்’ பள்ளி, கல்லூரிகள் மூடல்

பீஜிங்கில் ’ரெட் அலர்ட்’ பள்ளி, கல்லூரிகள் மூடல்


UPDATED : டிச 09, 2015 12:00 AM

ADDED : டிச 09, 2015 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2015 12:00 AM ADDED : டிச 09, 2015 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பீஜிங்
: சீன தலைநகரான பீஜிங்கில், காற்றில் மாசு அளவு அபாயகரமான அளவுக்கு அதிகரித்ததால், ரெட் அலர்ட் எனப்படும் எச்சரிக்கை அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது; பள்ளி, கல்லுாரிகளும் மூடப்பட்டன. உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு சீனா. 

இந்நாட்டின் தலைநகர் பீஜிங்கில், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் புகையால், காற்று மாசு அதிகரித்து, மக்கள் சுவாசிக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இங்குள்ள வீடுகளில், குளிருக்காக நிலக்கரி எரிப்பதும், மாசு அதிகரிக்க காரணமாகும். காற்றில் மாசின் அளவு, 300 அலகுகளைத் தாண்டினாலே, அது சுவாசிக்க தகுதியற்றதாகி விடும்; உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், பீஜிங்கில், நேற்று காற்றில் மாசின் அளவு, 365 அலகுகளாக உயர்ந்தது.

கார்களுக்கு தடை

அதனால், தனி நபர்கள் கார்களை இயக்குவதை கைவிட்டு, பஸ்கள் உட்பட, பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என, சீன அரசு கேட்டுக் கொண்டது. அத்துடன், பள்ளி, கல்லுாரிகளும் மூடப்பட்டன; அரசு கார்களும் ஓடவில்லை.

காலையில், நடைபயிற்சி மேற்கொண்டோர் முகக்கவசம் அணிந்து சென்றனர். புழுதி பறக்கும் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. சில தொழில் நிறுவனங்களில், இயந்திரங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. காற்றில் அதிகரித்த மாசு அளவு குறைய, இன்னும் ஓரிரு நாட்களாகும் என்பதால், அதுவரை பேட்டரியில் இயங்கும் பஸ்கள் மற்றும் வாகனங்களை இயக்க, சீன அரசு தீர்மானித்துள்ளது.

அபாய கட்டம்

பீஜிங்கில், 2013ல் அவசரகால மாசு கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தும், நேற்று முன்தினம் வரை, காற்றில் மாசு அளவு அபாயகட்டத்தை எட்டவில்லை. நேற்று அபாய கட்டத்தை எட்டியதால், எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us