தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச.13 வரை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை

டிச.13 வரை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை

டிச.13 வரை பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை


UPDATED : டிச 10, 2015 12:00 AM

ADDED : டிச 10, 2015 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2015 12:00 AM ADDED : டிச 10, 2015 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடும் வெள்ளப்பெருக்கால், பள்ளி கட்டடங்களில் விரிசல், மின் கசிவு, உள்கட்டமைப்பு சீர்குலைவு போன்ற கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நல்ல நிலையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளை திறக்கலாம் என்றாலும், மாணவர்கள், ஆசிரியர்கள் வசிக்கும் வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளம் வடிந்த இடங்களில், சுகாதார பணி, மறு கட்டமைப்பு, பாடப்புத்தகங்களை புதிதாக வாங்குதல், உளவியல் ரீதியாக மாணவர்களை தயார்படுத்துதல் போன்ற பிரச்னைகள் உள்ளன.எனவே, ஒரு வாரம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு, அடுத்த வாரம் பள்ளிகளை திறக்கலாம் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், டிச.,8ம் தேதி செய்தி வெளியானது.

இதையடுத்து, பள்ளிகளின் நிலவரம், குடியிருப்பு பகுதிகளின் மீட்பு பணி குறித்து, மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு நடத்தியதில், இந்த வாரம் பள்ளிகளை நடத்த முடியாத நிலையில் உள்ளதை கண்டறிந்தனர்.இந்நிலையில், டிச., 13ம் தேதி வரை, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர்கள், நேற்று அறிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us