தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி செல்ல மாணவர்கள் தயக்கம்!

பள்ளி செல்ல மாணவர்கள் தயக்கம்!

பள்ளி செல்ல மாணவர்கள் தயக்கம்!


UPDATED : டிச 10, 2015 12:00 AM

ADDED : டிச 10, 2015 11:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2015 12:00 AM ADDED : டிச 10, 2015 11:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபிசெட்டிபாளையம்
: பள்ளிக்கு செல்ல மனமின்றி
, பஸ்சுக்காக காத்திருப்பதாக கூறி, கோபி பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரியும் மாணவர்களை, அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதில், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோபி சரவணா தியேட்டர் சாலை துவங்கி, கச்சேரி மேடு வரை அரசு நிதியுதவி மற்றும் நகரவை பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளுக்கு சிறுவலூர், குன்னத்தூர், அத்தாணி, பங்களாப்புதூர் உள்ளிட்ட வெளியூரை சேர்ந்த மாணவர்கள், கோபி பஸ் ஸ்டாண்டில் காலை இறங்குகின்றனர். நடந்து செல்லும் தொலைவில் உள்ள கச்சேரி மேடு பள்ளிக்கு, அவ்வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள், தினமும் காலை, 9.30 மணிக்கு மேலாகியும், பள்ளிக்கு செல்லாமல், கோபி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுற்றியபடி திரிகின்றனர். சக நண்பர்கள் வருகைக்காக காத்திருக்கும் இவர்கள், பள்ளி செல்ல மனமின்றி, செய்வதறியாது பஸ் ஸ்டாண்ட் பிளாட்பார்ம் வளாகங்களில் நிற்கின்றனர். 

இவர்களில் பெறும்பாலும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணாக்கர்கள் தான் அதிகம் உள்ளனர். ஆனால் மாணவியர்கள் பெரும்பாலும், அவரவர் பள்ளிக்கு சென்று விடுகின்றனர். இதுபற்றி, அப்பகுதியை சேர்ந்த பள்ளி தலைமையாசிரியரோ அல்லது, கல்வித்துறை அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us