UPDATED : டிச 10, 2015 12:00 AM
ADDED : டிச 10, 2015 11:04 AM
பொள்ளாச்சி
: பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கடிதம் எழுதும் போட்டியை வரும்,
ஜன.,3ல் தபால்துறை
நடத்துகிறது.
இந்திய அஞ்சல்துறை சார்பில், பள்ளிமாணவ, மாணவியர் பங்கேற்கும் கடிதம் எழுதும் போட்டி 2016, ஜன.,3ம்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியில், 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்கலாம். போட்டிக்கான தலைப்பு Write a letter to your 45 years old self (தான் 45 வயது பூர்த்தி அடைந்த ஒருவராக கற்பனை செய்து, இப்போது அவருக்கு கடிதம் எழுதுவதாக இருக்க வேண்டும்).
தேசிய அளவில் வெற்றி பெரும் மாணவ, மாணவியரில் முதல் மூன்று பேருக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். முதல் பரிசாக, 5,000 ரூபாயுடன் சான்றிதழும், இரண்டாவது பரிசாக, 3,000 ரூபாயுடன் சான்றிதழும், மூன்றாவது பரிசாக இரண்டாயிரம் ரூபாயுடன் சான்றிதழும் வழங்கப்படும். தவிர, ஒவ்வொரு அஞ்சல் வட்டத்திலும் ஒரு சிறப்பு கடிதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆறுதல் பரிசாக, 1,000 ரூபாயுடன் சான்றிதழ் வழங்கப்படும். கடிதப்போட்டியில் பங்குபெறும் மாணவர்கள் பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரை 05259 - 224866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
