தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதரசாவில் திறன் பயிற்சி மத்திய அரசு புது திட்டம்

மதரசாவில் திறன் பயிற்சி மத்திய அரசு புது திட்டம்

மதரசாவில் திறன் பயிற்சி மத்திய அரசு புது திட்டம்


UPDATED : டிச 10, 2015 12:00 AM

ADDED : டிச 10, 2015 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2015 12:00 AM ADDED : டிச 10, 2015 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி
: இஸ்லாம் மதக் கல்வி போதிக்கப்படும் மதரசாக்களில்
, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

மதரசாக்களில் பயிலும் முஸ்லிம் சிறார்கள், இளைஞர்களின் மனதில், பயங்கரவாதத்தை புகுத்த முயற்சி நடக்கலாம் என, புலனாய்வு அமைப்புகள் தகவல் அளித்தன. ஐ.எஸ்., அச்சுறுத்தல் பற்றி விசாரணை நடத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், மதரசாக்களுக்கும், ஐ.எஸ்., இயக்கத்துக்கும் இடையில், தொடர்பு எதையும் கண்டறியவில்லை. இருப்பினும், சில மதரசாக்களுக்கு, இஸ்லாம் நாடுகளிடம் இருந்து, நிதியுதவி கிடைத்து வருகிறது. அந்த தொடர்பை பயன்படுத்தி, மதரசாக்களில், பயங்கரவாத அமைப்புகள், ஊடுருவ முயற்சிக்கலாம் என, புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன.

அதனடிப்படையில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சகத்துடன், மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அதையடுத்து, மதரசாக்களில், திறன் மேம்பாட்டு கல்வி பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதென, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அரசு வட்டாரங்கள் கூறுகையில், மதரசாக்களில் பயிலும் சிறார்கள் மற்றும் இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம், பயங்கரவாத அமைப்புகளின் பிடியில், இளைஞர்கள் சிக்காமல் தடுக்க முடியும் என்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us