UPDATED : டிச 15, 2015 12:00 AM
ADDED : டிச 15, 2015 10:31 AM
மகாராஷ்டிரா, கோலாப்பூரில் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த, தேசிய அளவிலான சிவாஜி மலையேறும் பயிற்சியில், மதுரை அல்அமீன் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஸ்வசெல்வன் பங்கேற்றார்.
1200 அடி உயரம் மலையேறியும், 54 கி.மீ., நடைபயணம் சென்றும் சான்றிதழ், பதக்கம் பெற்றார். மாணவரை பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ், தலைமையாசிரியர் ஷேக்நபி, என்.சி.சி., ஆசிரியர் சையத் அப்துல் காதர் ஜெய்லானி, உதவி தலைமையாசிரியர் ரகமத்துல்லா பாராட்டினர். குத்துச்சண்டையில் மாணவர் தங்கம் மதுரை பீ.பீ.குளம் தனபால் மேல்நிலைப் பள்ளி மாணவர் தீபக்ராஜ், மாநில குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார்.
பாரதியார் தின
மாநில விளையாட்டு போட்டிகள் சேலத்தில் நடந்தன. இதில், இப்பள்ளியின் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில்,
குத்து சண்டை போட்டியில், தீபக்ராஜ் முதலிடம் பெற்று, தங்கம்
வென்றார். சிலம்பம் போட்டியில் இதே பள்ளி மாணவர் சந்தோஷ் 3வது இடம் பெற்று, வெங்கலம் வென்றார்.
மாணவர்களை
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, தாளாளர் டேவிட்
அய்யாதுரை, தலைமையாசிரியர் தனபால் ஜெயராஜ்,
உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்பாபு பாராட்டினர்.
மூன்றாம் இடம்:
வெள்ளாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி கவிதா. இவர், பெண்களுக்கான சிலம்ப போட்டியில் மூன்றாம் இடம் பெற்று, வெங்கலப் பதக்கம் வென்றார். இவரை, தலைமையாசிரியர் சின்னதுரை, உடற்கல்வி ஆசிரியர் பிரபு மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டினர். தேசிய போட்டிக்கு மாணவியர் தேர்வுவாடிப்பட்டி தாய் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேசிய வாலிபால் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் பரமக்குடியில் நடந்த 14, 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளில் தாய் மெட்ரிக்., பள்ளி மாணவிகள் விஷ்வேதா, பூஜா ஆகியோர் தேர்வு பெற்றனர். நாமக்கல் மற்றும் தர்மபுரியில் நடந்த மாநில போட்டிகளில் வெற்றி பெற்று தமிழக அணிக்காக விளையாடும் தேசிய அணியில் இடம் பெற்றனர். டிச., 17ல் நடக்கும் தேசிய போட்டியில் விளையாடவுள்ளனர். உடற்பயிற்சி ஆசிரியர்கள் பிரவீன், நவீன் மற்றும் மாணவிகளை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
