UPDATED : டிச 18, 2015 12:00 AM
ADDED : டிச 18, 2015 01:57 PM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக, டிசம்பர் 7ம் தேதி தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனிடையே, பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனையடுத்து, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒத்திவைக்கப்பட்டிருந்தன அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் 11ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
