பல்கலைகளில் துணைவேந்தர் இல்லை; பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
பல்கலைகளில் துணைவேந்தர் இல்லை; பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
UPDATED : டிச 22, 2015 12:00 AM
ADDED : டிச 22, 2015 03:30 PM
அதனால், மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பிறகும் பட்டம் கிடைக்காமல், வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், பல பல்கலைகளில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. பேராசிரியர் மற்றும் துறைகளின் இயக்குனர் பதவிகளும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப, உயர் கல்வித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போதைய
சூழலில், மதுரை காமராஜர்,
திரு நெய்வேலி மனோன் மணியம் சுந்தரனார்,
வேலூர் திருவள்ளுவர், கோவை பாரதியார், சென்னை கல்வியியல் பல்கலையில், பல் மாதங்களாக துணை வேந்தர் இல்லை. &'கன்வீனர் கமிட்டி&' எனப்படும் ஒருங்கிணைப்பு குழுவின் மூலம், முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது
குறித்து, மாணவர்கள் மற்றும்
பேராசிரியர்கள் கூறியதாவது:
புதிய
துணைவேந்தர் நியமிக்கப்படாமல் பல்கலைகள் மற்றும் இணைப்பு கல்லூரிகளின் பணிகள்
பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள்
வழங்க, பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. பட்டய
தேர்வு மற்றும் சான்றிதழ் தேர்வு முடித்தவர்களுக்கும் சான்றிதழ் வழங்கவில்லை.
காமராஜர்
பல்கலையில், செப்டம்பர் மற்றும்
அக்டோபரில் நடக்க வேண்டிய பட்டமளிப்பு விழா குறித்து இதுவரை எந்த அறிவிப்பும்
வரவில்லை. அதனால், சான்றிதழ் இல்லாமல்
படிப்பை முடித்த பிறகும், வேலைக்கு செல்ல
முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இது, தவிர, புதிய பாடப்பிரிவுகள் துவங்குவது, கல்லூரிகளுக்கு இணைப்பு புதுப்பித்தல் போன்ற பல பணிகள் முடங்கியுள்ளன. எனவே, உயர் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பல்கலை துணைவேந்தர் பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
