முதுநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு; டாக்டர்களின் சிக்கலுக்கு தீர்வு?
முதுநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு; டாக்டர்களின் சிக்கலுக்கு தீர்வு?
UPDATED : டிச 29, 2015 12:00 AM
ADDED : டிச 29, 2015 10:29 AM
சென்னை
: முதுநிலை
மருத்துவ நுழைவுத்தேர்வு எழுத, பிற மாநிலங்கள் செல்ல வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், தமிழக விண்ணப்பதாரர்களுக்கு சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
முதுநிலை
மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்து
படிப்பதற்கான நுழைவுத்தேர்வு, டிச., 4ல் நடந்தது. வெள்ள பாதிப்பு இருந்ததால், சென்னையில் இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு, ஜன., 11ல் நடக்க உள்ளன. சென்னையில் வழக்கமாக,
ஐந்து மையங்களில் தேர்வுகள் நடக்கும். இந்த
முறை, பெண்களுக்காக, ஒரு மையம் மட்டுமே சென்னையில் அமைந்துள்ளது.
மற்ற, நான்கு மையங்களில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள், கவுகாத்தி, கோல்கட்டா, மும்பை என, பிற மாநில மையங்களுக்கு
மாற்றப்பட்டுள்ளனர். அங்கு தான் தேர்வு எழுத வேண்டும் என்பதால், விண்ணப்பித்தோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் ரவீந்தரநாத் கூறியதாவது:
ஏற்கனவே, மருத்துவம்
முடித்து பணியில் உள்ளோர், முதுநிலை மருத்துவம் படிக்க
விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுத,ஒரு நாள் விடுப்பு தான் கிடைக்கும்.
பிற மாநிலங்களில் மையம் உள்ளதால், ஐந்து நாட்கள் வரை விடுப்பு எடுக்க
வேண்டும். பண்டிகை காலம் என்பதால், ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை.
விமானத்தில் செல்ல பொருளாதாரம் இடம் தராது என்பதால், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் தேர்வுக்கு செல்ல முடியாது.
எனவே, சென்னையில் தேர்வு மையங்களை அமைக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, ஜன., 2ல், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த
உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
பிரச்னை குறித்து, தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தீர்வு காண வேண்டும் என, பல்வேறு டாக்டர்கள் சங்கங்கள், அரசியல் கட்சிகள்வலியுறுத்தி உள்ளன. தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவர்களின் கோரிக்கை குறித்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றனர்.
தேர்வு சென்னையில் வேண்டும்
மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு மையங்கள், டில்லி, மும்பை, புனே, புவனேஷ்வர் போன்ற இடங்களில் உள்ளன. தமிழகத்தில், மருத்துவ உயர் கல்விக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களும், இந்த இடங்களுக்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும் என, மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத காத்திருக்கும், 5,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, அவர்கள் சென்னையிலேயே நுழைவுத் தேர்வு எழுதும் வகையில், இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்பாடு செய்ய வேண்டும்
