UPDATED : டிச 29, 2015 12:00 AM
ADDED : டிச 29, 2015 10:30 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை அழகர்கோவில் மகாத்மா பள்ளியில்
மனித உரிமை கல்வி நிறுவனம் சார்பில், ஆறு மாவட்டங்களை
சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, மனித உரிமை கல்வி விழிப்புணர்வு
பயிற்சி நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சொக்கி வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் தான் சமுதாயத்தின் பொக்கிஷம். மாணவ பருவத்தில் மனித உரிமைகள் குறித்து அறிவதால் அவர்களின் எதிர்காலம் வலுப்பெறும். அமைதியை குலைக்கும் சூழலில் இருந்து குழந்தைகள் தப்பிக்க இதுபோன்ற விழிப்புணர்வு பயிற்சிகள் அவசியம், என்றார். பள்ளி முதல்வர் வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
