தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்

தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்

தேசிய டென்னிக்காய்ட் போட்டி புதுச்சேரி மாணவர்கள் அசத்தல்


UPDATED : டிச 30, 2015 12:00 AM

ADDED : டிச 30, 2015 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2015 12:00 AM ADDED : டிச 30, 2015 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி
: கேரளாவில் நடந்த தேசிய சப்ஜூனியர் டென்னிக்காய்ட் போட்டியில் புதுச்சேரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

கேரள மாநில டென்னிக்காய்ட் சங்கம், அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் சார்பில், 30வது சப் ஜூனியர் டென்னிக்காய்ட் தேசிய போட்டி, கேரளா கஞ்சன்காட்டில் நடந்தது. இதில், புதுச்சேரி மாநிலம் சார்பில் சிறுவர் சிறுமியர் அணிகள் பங்கேற்றன.பயிற்சியாளர் காந்தி, மேலாளர் ராஜாராமு, செல்வலட்சுமி உடன் சென்றனர். 

இதில், சிறுவர் பிரிவில் பங்கேற்ற பிரதாப், முகமது ஆசிக் அலி முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சதிஷ்குமார், முத்தழகி 2ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.சிறுமியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பானுப்பிரியா, சவிதா, ஜீவிதா, முத்தழகி, கமலி, யுவலட்சுமி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பாகூர் சப் இன்ஸ்பெக்டர் நியூட்டன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராமு ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us