UPDATED : டிச 30, 2015 12:00 AM
ADDED : டிச 30, 2015 10:36 AM
புதுச்சேரி
: புதுச்சேரி
பல்கலைக் கழகத்தில், வேதியியல் துறை சார்பில் மூன்று
நாட்கள் நடக்கும், கார்போஹைட்ரேட் கருத்தரங்கு நேற்று
துவங்கியது.
கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் வேதியியல் துறைத் தலைவர் தரணிக்கரசு வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் அனுஷா பஷீர்கான் தலைமை தாங்கி, சிறப்புரையாற்றினார். கார்போஹைட்ரேட் வேதியியல் தொழில்நுட்ப சங்க தலைவர் கார்த்தா, சங்க செயல்பாடுகள் குறித்து விவரித்தார். கார்போஹைட்ரேட் டிரன்ட் பி.எல்.சோனி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கார்போஹைட்ரேட் சங்க செயலாளர் பேராசிரியர் அசோக் பிரசாத் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து வேதியியல் துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சிவசங்கர் நன்றி கூறினார்.
