UPDATED : டிச 30, 2015 12:00 AM
ADDED : டிச 30, 2015 11:35 AM
இப்பல்கலையில் துணைவேந்தராக இருந்த கல்யாணி பதவி காலம் ஏப்ரலில் முடிந்தது. பின் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் துணைவேந்தர் தேர்வுக் குழுவை அரசு அமைத்தது. 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், விண்ணப்பங்களை இறுதி செய்து, மூவரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டுள்ளது.
விரைவில்
தேர்வுப் பணி முடியும், என முருகதாஸ் கூறினாலும் தேர்வுக் குழு
உறுப்பினர்களிடையே நிலவும் கருத்து வேறுபாட்டால் இறுதி செய்யும் பணியில் இழுபறி
ஏற்பட்டுள்ளது.
செயலர் திடீர்
முடிவுபல்கலையில் ஆராய்ச்சி பிரிவு முடக்கம் உட்பட பல்வேறு பிரச்னைக்கு தீர்வு
காண்பது, பட்டமளிப்பு விழா நடத்த வேண்டிய
சூழ்நிலை ஏற்பட்டதால், கன்வீனர் கமிட்டியுடன் ஆலோசனை நடத்திய
உயர்கல்வி செயலர் அபூர்வா, ஜனவரி கடைசி வாரத்தில் பட்டமளிப்பு
விழா நடந்த தேதி கேட்டு கவர்னர் ரோசய்யாவிற்கு கடிதம் அளித்தார்.
தாமதம்பல்கலைக்கு டிசம்பருக்குள் புதிய துணைவேந்தர் நியமித்து, ஜன.,யில் பட்டமளிப்பு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பட்டமளிப்பு விழா நடத்த செயலர் அபூர்வா நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளதால் புதிய துணைவேந்தர் நியமனத்தில் மேலும் தாமதம் ஏற்படும், என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
