தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் கல்லூரி விடுதிக்கு விண்ணப்பம் வரவேற்பு

பொறியியல் கல்லூரி விடுதிக்கு விண்ணப்பம் வரவேற்பு

பொறியியல் கல்லூரி விடுதிக்கு விண்ணப்பம் வரவேற்பு


UPDATED : டிச 30, 2015 12:00 AM

ADDED : டிச 30, 2015 10:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 30, 2015 12:00 AM ADDED : டிச 30, 2015 10:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்
: ராமநாதபுரத்தில் அரசு சிறுபான்மையினர் நல பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. 

கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: 

ராமநாதபுரத்தில் அரசு சிறுபான்மையினர் நல பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதி துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விடுதியில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். தங்குமிடம், உணவு இலவசம். அரசு மற்றும் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் சிறுபான்மை மற்றும் அனைத்து சமுதாய மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 

குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விடுதியில் சேர விரும்புவோர் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிச., 31 க்குள் சமர்ப்பிக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us