பெண் கல்வியால் மாற்றம் வரும் ’தினமலர்’ ஆசிரியர் வாழ்த்து
பெண் கல்வியால் மாற்றம் வரும் ’தினமலர்’ ஆசிரியர் வாழ்த்து
UPDATED : டிச 30, 2015 12:00 AM
ADDED : டிச 30, 2015 04:54 PM
பெண்கள் அதிக அளவில் கல்வி கற்று, நல்ல மதிப்பெண் பெற்று வருகின்றனர். அவர்களது கல்வியால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் வரப் போகிறது, என, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மாணவியரை வாழ்த்தியுள்ளார்.
10
ஆண்டுகளுக்கு மேல்
அப்போது
அவர் வாழ்த்தி பேசியதாவது: மாநகராட்சி பள்ளிகளிலிருந்து, ஆசிரியர்களுடன் வந்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, தினமலர் சார்பில்
நல்வரவு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நேரடியாக பங்கேற்று,
நிகழ்ச்சி முழுவதையும் பார்த்து
வருகிறேன். நிகழ்ச்சி அரங்கில் அமர்ந்து, நிகழ்ச்சியின்
அனைத்து அம்சங்களையும், மாணவர்களின்
ஆர்வத்தையும் நேரில் பார்த்துள்ளேன். மாணவர்களிடம் நல்ல உற்சாகம் தெரிகிறது. மாணவ,
மாணவியர் ஆரோக்கியத்துடன், முகப்பொலிவுடன், ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியில்
பங்கேற்கிறீர்கள். காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. பெண்கள் அதிக அளவில் கல்வி
கற்கின்றனர்; நல்ல மதிப்பெண்களை
பெறுகின்றனர். பெண்களின் இந்த படிப்பாற்றல், சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரப்போகிறது.
வாழ்க்கை
தரம் மாறும்
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மேற்படிப்புக்கு செல்லவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவும் வழிகாட்டவே, இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கல்வி தான் உங்களை மாற்றப் போகிறது; உங்கள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் ஏற்படும். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, எம்.பி.பி.எஸ்., போன்ற உயர்படிப்புக்களை படிக்கும் போது, ஏழ்மை நிலை மாறி, வாழ்க்கை தரமும் மாறும். அப்படி நல்ல வாழ்க்கையை பெற, உங்களை வாழ்த்துகிறேன்! இவ்வாறு அவர் பேசினார்.
100 சதவீத தேர்ச்சி மாணவர்கள் உறுதி
நிகழ்ச்சியின்
இடையே, மாணவ, மாணவியர் தரப்பில் தலா ஒருவரை, மேடையில் பேச அழைக்கப்பட்டனர். ஸ்ட்ராஹேன்ஸ் சாலை
சென்னை பள்ளி மாணவி ஆயிஷா பேசும் போது, இந்த
நிகழ்ச்சிக்கு வரலாமா என யோசித்து வந்தேன். ஆனால், வராமல் இருந்தால் தேர்வில் வெற்றி பெறுவதற்கான
எவ்வளவோ வழிகளை தவறவிட்டிருப்பேன் என்பது, இங்கு
வந்தபின் தான் தெரிந்தது. அனைத்து பாடங்களையும் கவனமாக குறிப்பு எடுத்துள்ளோம்.
அவ்வளவு பயனுள்ளதாக இருந்தது, என்றார்.
எருக்கஞ்சேரி சென்னை உயர்நிலைப் பள்ளி மாணவர் சண்முகராஜா பேசும் போது, 100 சதவீத தேர்ச்சி வேண்டுமென்ற லட்சியத்தில், இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக நடத்துவதாக கேள்விப்பட்டேன். அந்த லட்சியத்தை மாணவர்கள் அடைந்து காட்டுவோம், என்றார்.
இருவருக்கும், அப்துல் கலாம் எழுதிய, 2020 நாளைய இந்தியாவின் தொலைநோக்கு பார்வை என்ற புத்தகத்தை, தினமலர் ஆசிரியர்
டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பரிசாக வழங்கினார்.
