நூலகத்தில் அதிகரிக்கும் வாசகர்கள்; தரம் உயர்த்த எதிர்பார்ப்பு!
நூலகத்தில் அதிகரிக்கும் வாசகர்கள்; தரம் உயர்த்த எதிர்பார்ப்பு!
UPDATED : ஜன 02, 2016 12:00 AM
ADDED : ஜன 02, 2016 11:24 AM
காரைக்குடி
:
காரைக்குடி இரண்டாம் நிலை நூலகம் முதல் நிலையாக தரம் உயர்த்த, காரைக்குடி எம்.எல்.ஏ., நடவடிக்கை
எடுக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்குடியில் 1969ல் நூலகம் தோற்றுவிக்கப்பட்டு, 2013-ம் ஆண்டு வரை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. 2014-ல் 15 சென்ட் இடத்தில் ரூ.55 லட்சத்தில் முடியரசன் சாலையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு
திறக்கப்பட்டது. தரைதளத்தில் நூல் வைப்பு அறை, மேல் தளத்தில் படிக்கும் அறை, குடிமை பணி பயிற்சி அறை உள்ளது. போட்டித்தேர்வுக்கான அனைத்து
நூல்களும், கணிப்பொறி வசதி, புத்தக நகல் எடுக்கும் பகுதி, தேர்வு முடிவு பார்க்கும் வசதி உள்ளன. 46 ஆயிரம் நூல்கள் உள்ளன.
தினமும் 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள், 150-க்கும் மேல் இரவல் நூல் பெறுவது, 7ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். பள்ளி மாணவர்கள் அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். 2014-ல் புரவலர் சேர்ப்பில் தமிழகத்தில் முதல் நூலகமாக தேர்வு செய்யப்பட்டது. இரண்டாம் நிலை நூலகமாக இருப்பதால், போதிய பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி முகாம் நடத்த முடிவதில்லை. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகராட்சியில் நாளுக்கு நாள் வாசகர் எண்ணிக்கையும், இரவல் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், போதிய பணியாளர்கள் மூலம் வாசகர்கள் கேட்கும் தகவல்களை அளிக்கவும்
முடியாத நிலை உள்ளது. வாட்ச்மேன் பணியிடம் காலியாக உள்ளதால், கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காரைக்குடி நூலகத்தை
முதல் நிலை நூலகமாக தரம் உயர்த்த சோழன் சித.பழனிச்சாமி எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
