தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?


UPDATED : ஜன 05, 2016 12:00 AM

ADDED : ஜன 05, 2016 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2016 12:00 AM ADDED : ஜன 05, 2016 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்றத் தாழ்வுகள்:

சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனு விவரம்: நம் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பல வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. குழந்தைகளின், சமூக, பொருளாதார நிலைக்கு ஏற்ப கல்வியும் மாறுபடுகிறது.

நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாடு என கூறுவதற்கு, இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறை நிச்சயம் உதவாது. சமூகம், பொருளாதாரம், மதம், கலாசாரம் என, எந்த வகையிலும், குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாது என, அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் கல்வி உரிமை சட்டமானது, குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி, ஆறு முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான பாட திட்டத்துடன் கூடிய கல்வியை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

சமூக, பொருளாதார பாகுபாடு நீங்க வேண்டும் என்றால், ஒரே விதமான பாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். பின்லாந்து, டென்மார்க், நியூசிலாந்து, நார்வே, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறை தான் அமலில் உள்ளது.

உத்தரவிட வேண்டும்:

அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்தும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார். குளிர்கால விடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும் இந்த வாரத்தில் செயல்படத் துவங்கும். அப்போது, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us