பள்ளி மோட்டார் பழுதால் மாணவர்களுக்கு குடிநீர் இல்லை
பள்ளி மோட்டார் பழுதால் மாணவர்களுக்கு குடிநீர் இல்லை
UPDATED : ஜன 05, 2016 12:00 AM
ADDED : ஜன 05, 2016 10:21 AM
சிங்கம்புணரி
:
எஸ்.எஸ்.கோட்டை துவக்கப்பள்ளியில் குடிநீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளதால்
சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை என சிங்கம்புணரி ஊராட்சி
ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர் புகார் செய்தார்.
ஒன்றிய குழு
கூட்டம் தலைவர் வாசு தலைமையில் நடந்தது.
விவாதம்
வருமாறு:
நாகராஜன்
தி.மு.க.,: எஸ்.மாத்தூர்- உடன்பட்டி, முத்தாண்டிபட்டி- மாம்பட்டி, வணங்கா
முடிபட்டி காடுகாவலன் கோயில் சந்திப்பு ரோடு மோசமாக பழுதடைந் துள்ளது.
தலைவர் வாசு:
எஸ்.மாத்தூர்- உடன்பட்டி ரோடு நபார்டு திட்டத்தில் ரூ 64 லட்சம் மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி
துவங்கும். சுப்பிரமணியன் சுயே.,: எஸ்.எஸ். கோட்டை துவக்கப்பள்ளியில்
மோட்டார் பழுதடைந்து மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை.ஊராட்சி நிர்வாகம் பழுது
பார்க்க மறுக்கிறது.
பி.டி.ஓ.,ஜெயராமன்: ஊராட்சியில் நிதி இல்லை. எஸ்.எஸ்.ஏ.,திட்டத்தில் உடனே பழுது பார்க்க ஏற்பாடு செய் வோம்.
நாகராஜன்
தி.மு.க.,: சீமைக்கருவேல் மரங்களை அழிக்க
உத்தரவிட்டும் அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தவில்லை.
பி.டி.ஓ.,
ஜெயராமன்: மரங்களை அகற்ற ,8 ஊராட்சிகள் அனுமதி கேட்டுள்ளது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் அனுமதி
பெற்று செயல்படுத்துவோம்.
சுப்பிரமணியன்
சுயே.,: 2 வருடமாக எஸ்.எஸ். கோட்டை பழுதடைந்த
தார் ரோடுபற்றி சொல்லியும் மேம்படுத்தவில்லை.ஒன்றிய பொறியாளர்: நபார்டு
திட்டத்தில் சேர்ப்போம்.
நல்லையா
அ.தி.மு.க.,: ஒன்றிய வளாகத்தில் பொது மக்கள்
பயன்பாட்டிற்கு கட்டப்படும் பொது கழிப்பிடப்பணி தாமதப்பட்டுள்ளது.
தலைவர் வாசு: விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்போம்.
