தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தென்மண்டல ஆடவர் கூடைபந்து போட்டி!

தென்மண்டல ஆடவர் கூடைபந்து போட்டி!

தென்மண்டல ஆடவர் கூடைபந்து போட்டி!


UPDATED : ஜன 05, 2016 12:00 AM

ADDED : ஜன 05, 2016 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2016 12:00 AM ADDED : ஜன 05, 2016 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம்
தென்மண்டல அளவிலான பல்கலை ஆடவர் கூடைபந்து போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

காட்டாங்குளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில், தென்மண்டல அளவிலான பல்கலைக்கழக ஆடவர் கூடைபந்து போட்டி, அதன் வளாகத்தில் நடந்தது. அதில், 80 பல்கலை அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டத்தில், அண்ணா பல்கலைக்கழக அணி, 67 - 50 என்ற புள்ளிக்கணக்கில், சென்னை பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக அணி, 70 - 60 என்ற புள்ளிக்கணக்கில், கேரள பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது.

லீக் போட்டிகளில், ஒரு அணி மற்ற மூன்று அணிகளுடன், தலா ஒரு முறை போட்டிகளில் மோதின. அதில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக அணி, மூன்று வெற்றிகளை பெற்று, முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு வெற்றிகளுடன் அண்ணா பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பிடித்தது. கேரள பல்கலை அணி, ஒரு வெற்றியுடன் மூன்றாம் இடத்தைதக்க வைத்து கொண்டது. ஒரு போட்டியையும் வெல்லாத சென்னை பல்கலை அணி, நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us