UPDATED : ஜன 05, 2016 12:00 AM
ADDED : ஜன 05, 2016 10:26 AM
ராமநாதபுரம்
: அழகப்பா
பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயத்தில் ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை
கல்லுாரி மாணவி புதிய சாதனையுடன் 2 தங்கம் வென்றார்.
காரைக்குடியில் 2015 டிச., 12, 13 ல் அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே நடந்த தடகளப் போட்டிகளில் 14 கல்லுாரிகள் பங்கேற்றன. கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவி ரோஸ்னி பாத்திமா 100 மீ., யை 12.44 வினாடிகளிலும், 200 மீ.,யை 26.08 வினாடிகளிலும் கடந்தார். அவருக்கு 2 பிரிவுகளிலும் தங்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 மீ.,ல் 12.61 வினாடிகள், 200 மீ., ல் 26.91 வினாடிகள் என்ற முந்தைய சாதனைகளை முறியடித்தார். அவர் பஞ்சாபில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்கிறார். அவரை கலெக்டர் நந்தகுமார் பாராட்டினார்.
ரோஸ்னி பாத்திமா கூறுகையில், அழகப்பா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில் 2012 ல் நடந்த 26 வது மாநில ஜூனியர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றேன். ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மண்டல அளவிலான 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே என் குறிக்கோள், என்றார்.
