UPDATED : ஜன 06, 2016 12:00 AM
ADDED : ஜன 06, 2016 10:30 AM
ஊட்டி
: ஊட்டி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், வேலையில்லா பட்டதாரிகள் திரளாக பங்கேற்றனர்.
ஊட்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், மாதந்தோறும், தனியார் நிறுவனங்கள் மூலம், வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கம்ப்யூட் டர் துறை சார்ந்த ஒரு நிறுவனம், வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
மாவட்ட வேலை
வாய்ப்பு அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வடிவேல் துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல
இடங்களில் இருந்து, ஏராளமான வேலையில்லா பட்டதாரி இளைஞர்,
இளம் பெண்கள், கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்றனர். வேலை மீதான தேடல் தங்களுக்கும் வேலை கிடைக்காதா? என்ற ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர், இளம் பெண்கள் மத்தியில், தனியார்
நிறுவனத்தினர் பேசுகையில்,ஆங்கிலப் புலமை பெற்ற, எம்.பி.ஏ., பட்டதாரிகள் தான் எங்களது முதல் தேடல் என்றனர். நம்பிக்கை இழந்த இளைஞர்கள் சிலர்,
நாங்கள் எம்.பி.ஏ., படிக்காவிட்டாலும், ஆங்கில புலமையை பெற்றிருக்கிறோம்;
எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கதா? என கேள்வி எழுப்ப, பி.பி.ஓ., துறையில் பணி உள்ளது என கூறப்பட்டு, நேர் காணல் நடந்தது. முகாமில், பங்கேற்ற, 100க்கும் மேற்பட்டவர்களில், எட்டு பேர் தனியார் நிறுவனத்தினரால் தேர்வு செய்யப்பட்டனர்.
10ம் தேதிக்கு
தயாராகுங்க!
வரும், 10ம் தேதி, கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில், கோவை மண்டல அளவில், மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்தேர்வு நடத்த உள்ளன. இதிலும், இளைஞர், இளம் பெண்கள் பங்கேற்கலாம். விபரம் தேவைப்படுவோர், ஊட்டியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டது.
