UPDATED : ஜன 06, 2016 12:00 AM
ADDED : ஜன 06, 2016 10:31 AM
தர்மபுரி
:
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக நூலகர் பணியிடம் காலியாக உள்ளதால், நூலக கட்டடம் வகுப்பறையாக மாறியுள்ளது.
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் தங்கள் கல்வி அறிவு மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில், துறை சார்ந்த புத்தங்கள் உட்பட பல்வேறு புத்தகங்கள் கொண்ட பொதுநூலகம் துவங்கப்பட்டது. இந்த நூலகத்தில் காலியான நூலகர் பணியிடம் நிரப்பப்படாததால், கடந்த சில ஆண்டுகளாக, வகுப்பறை கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது.
நூலகர் பணியிடத்தை நிரப்ப, மாவட்டத்தைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆர்வம் காட்டமால் உள்ளது, மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த கல்லூரியில், கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, உடற்கல்வி இயக்குனர் பணியிடமும் காலியாக உள்ளது.
