தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யு.ஜி.சி., சம்பள விகிதம் கல்லூரி அலுவலர்கள் தீர்மானம்

யு.ஜி.சி., சம்பள விகிதம் கல்லூரி அலுவலர்கள் தீர்மானம்

யு.ஜி.சி., சம்பள விகிதம் கல்லூரி அலுவலர்கள் தீர்மானம்


UPDATED : ஜன 06, 2016 12:00 AM

ADDED : ஜன 06, 2016 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2016 12:00 AM ADDED : ஜன 06, 2016 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
:
 கல்லுாரி அலுவலர்களுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) வரையறைப்படி சம்பளம் வழங்க வேண்டும்என தமிழ்நாடு தனியார் கல்லுாரி அலுவலர்கள் சங்க (டான்சாக்) மண்டல மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்த மாநாட்டிற்கு, தலைவர் அழகர்சாமி தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய திட்டத்தை கைவிட மறுக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஆசிரியர்கள், அலுவலர்கள் நிலைப்பாடு இருக்க வேண்டும்.

கல்லுாரி அலுவலர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது சம்பள குழுவில் 10 ஆண்டுகளாக நீடிக்கும் முரண்பாடுகளை உடனடியாக களைய வேண்டும்.தனியார் கல்லுாரி அலுவலர்களுக்கு யு.ஜி.சி.,-ஏ.ஐ.சி.டி.இ., வரையறைப்படி சம்பளம் நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us