தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?

பொதுத்தேர்வு தேதி வந்தாச்சு! செய்முறை தேர்வு எப்போது?


UPDATED : ஜன 07, 2016 12:00 AM

ADDED : ஜன 07, 2016 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2016 12:00 AM ADDED : ஜன 07, 2016 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மார்ச், 4ல் பிளஸ் 2 வுக்கும், மார்ச், 15ல், 10ம் வகுப்புக்கும் தேர்வு துவங்க உள்ளது. வெள்ளம் பாதித்த, நான்கு மாவட்டங்களுக்காக, தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜன., 11ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வு துவங்கி, 27ல் முடிகிறது. இதையடுத்து, செய்முறை தேர்வை நடத்த வேண்டும். அதற்கு கணினி அறிவியல், தாவரவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் விலங்கியல் மாணவர்களுக்கு, 10 நாட்கள் தேவைப்படும். பின், பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மூன்று திருப்புதல் - ரிவிஷன் - தேர்வுகள் நடத்த வேண்டும்.

எனவே, பொதுத் தேர்வை, 10 நாள் தள்ளிவைக்க, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அரசு தேர்வுத் துறை, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வு துவங்கும் படி செய்துள்ளது. இந்நிலையில், இந்த மாதம் முழுவதும், அரையாண்டு தேர்வு நடக்கும் நிலையில், செய்முறை தேர்வு எப்போது என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, பிப்ரவரி 5 - 25க்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

செய்முறை தேர்வு எப்போது என, தாமதமின்றி அறிவித்தால் மட்டுமே, அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த முடியும். பிப்ரவரி முதல் வாரத்திலேயே செய்முறை தேர்வை நடத்தி முடித்தால் தான், அடுத்தடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தி, பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த முடியும். பேட்ரிக் ரைமண்ட், பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us