போலி சான்றிதழ் விவகாரம்; விடுமுறையில் சென்ற ஆசிரியர்கள்
போலி சான்றிதழ் விவகாரம்; விடுமுறையில் சென்ற ஆசிரியர்கள்
UPDATED : ஜன 07, 2016 12:00 AM
ADDED : ஜன 07, 2016 10:55 AM
தர்மபுரி
: போலி
சான்றிதழ் தொடர்பான விசாரணை, தீவிரம் அடைந்து வரும் நிலையில்,
திடீர் என விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போலி ஜாதி மற்றும் கல்வி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாராதியார் நகரைச் சேர்ந்த முனியப்பன், 37, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சானூரைச் சேர்ந்த செந்தில்குமார், 38, இவர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்த கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன், 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் விசாரித்தில், ராஜேந்திரன் மூலம், பலர் போலி ஜாதி, கல்வி சான்றிதழ் பெற்று, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில், ஆசிரியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மாவட்டங்களில் திடீர் என விடுமுறை எடுத்த, 40 ஆசிரியர்கள் குறித்த, விபரங்களை கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து போலீசார் பெற்றுள்ளனர். அவர்களின் விடுமுறைக்கான காரணம் மற்றும் சான்றிதழின் உண்மை தன்மை குறித்தும் விசாரித்து வருகின்றனர். மேலும், முன்னறிவிப்பு இன்றி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் குறித்த விபரங்களையும் அளிக்க, கல்வித்துறையினருக்கு, போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
கல்வித்துறையினர் எடுத்த கணக்கெடுப்பில், முன் அறிவிப்பு இன்றி விடுமுறை எடுத்தவர்களின் எண்ணிக்கை, 100க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த விபரங்களை பெற்றுள்ள போலீசார், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். போலி சான்றிதழ் பெற்று, பல்வேறு மாவட்டங்களில் பலர் ஆசிரியர் பணி பெற்றுள்ளதால், இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
